உலகக்கோப்பை வெற்றி அணியை கணித்த ஜோதிடர் பிகில் படம் குறித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா?



balaji-hassan-talks-about-bigil-movie-success

புதிதாக ஒரு அணி இந்த முறை உலகக்கோப்பையை வெல்லும் என்று கூறி அதேபோல் நடந்ததால் சமூக வலைத்தளங்களில் பிரபலமானார் ஜோதிடர் பாலாஜி ஹாசன். இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் பிகில் படம் வெற்றிபெறுமா என்பது குறித்து பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.

Bigil

இதுபற்றி அவர் கூறுகையில் பிகில் படம் மிக பெரிய அளவில் வெற்றிபெற்று வசூலில் புதிய சாதனை படைக்கும் என்றும், அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தும் எனவும் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.

விஜய், அட்லீ, நயன்தாரா, AR ரஹ்மான் இவர்களின் ஜாதகத்தை வைத்தே இதை தாம் கணித்ததாகவும் அவர் கூறியுள்ளார். பிக்பாஸ் வெற்றியாளர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பாலாஜி ஹாசன் கூறியது பெரும்பாலும் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.