பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பெங்களூரு போலீசார் வெயிட்டிங்! விரைவில் கைதாகிறார் நடிகர் அர்ஜுன்! விஸ்வரூபம் எடுக்கும் MeToo.
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக அனைவருக்கும் தெரிந்த ஒரு நடிகர் என்றால் அது நடிகர் அர்ஜுன்தான். இன்றளவும் அவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நிபுணன் படத்தில் தான் நடிக்கும் போது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக படத்தில் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்த ஸ்ருதி கரிகாரன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு #MeToo வில் புகார் அழைத்திருந்தார்.
இதற்கு உடனடியாக விளக்கம் அளித்தார் நடிகர் அர்ஜுன். படத்தில் நடிக்கும்போது அர்ஜுன் அனைவர் முன்னிலையிலும் என்னை கட்டிபிடித்ததாகவும், முதுகில் தடவியதாகவும் புகார் அழைத்திருந்தார் ஸ்ருதி.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அர்ஜுன் பக்கம் இருந்து மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் சார்ப்பாக பெங்களூரு காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பெங்களூரு போலீசார் விரைவில் நடிகர் அர்ஜுனை கைது செய்யலாம் என எதிர்பார்க்க படுகிறது.