#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கமலஹாசனை அந்த வார்த்தையில் திட்டிய பிரபல நடிகர்.? அதிர்ச்சி அடைந்த திரைத்துறையினர்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் வித்யாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதன் பிறகு சங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதுபோன்ற நிலையில், கமலஹாசனின் நடிப்பை பார்த்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் இளவரசு என்பவர் பெருமிதத்துடன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் 'பாபநாசம்' திரைப்படத்தில் கமலஹாசன் ஒரு காட்சியில் நடித்த விதம் படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்ததாம். அவர் நடித்ததை மானிட்டரில் பார்த்த இளவரசு 'சண்டாளன்' என்று கூறியிருக்கிறார். இவர் கமலஹாசனை திட்டி விட்டார் என்று படக்குழு அதிர்ச்சியடைந்தது. ஆனால் கமலஹாசன் சாதாரணமாக இளவரசுவின் தோள் மேல் கை வைத்து சிரித்துவிட்டு சென்றாராம். இச்செய்தி தற்போது வைரலாகி வருகிறது.