#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குட்டையான உடையில் குதூகலமாக போஸ் கொடுத்த நடிகை பிரியா பவானி சங்கர் - வியப்பில் ரசிகர்கள்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இளைஞர்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்ததில் அம்மணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம்.
ஒருகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா தான் நடித்த டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரை பக்கம் சென்றார். அதனை தொடர்ந்து மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் எப்பொழுதுமே சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது குட்டையான உடையில் அழகான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.