குவைத்தில் தளபதியின் பீஸ்ட் படத்திற்கு தடை... என்ன காரணம் தெரியுமா.? வருத்தத்தில் ரசிகர்கள்...



Beast movie banded in kuvaith

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஷான் டாம் சாக்கோ, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால் பீஸ்ட் படத்தை குவைத்தில் மட்டும் திரையிட தடை விதித்துள்ளது.

Kuvaith

அதாவது பீஸ்ட் படம் பணயக்கைதிகள் அடிப்படையிலான திரில்லர் படமாக உருவாகி உள்ளது. குவைத்தின் நலன்களுக்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காட்சிகளை பீஸ்ட் காட்டுவதால் படத்திற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.