#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாரதியின் கனவை நினைவாக்கும் நடிகர் அரவிந்த் சாமி.
நடிகர் அரவிந்தசாமி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து ரோஜா, பம்பாய் போன்ற படங்களின் வாயிலாக மிகவும் பிரபலமடைந்தார். 1990 காலகட்டங்களில் புகழின் உச்சியில் இருந்தார்.. அதன் பிறகு அமைந்த படங்கள் சறுக்கல்களை சந்தித்ததால் கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார். பிறகு 2013ஆம் ஆண்டு வெளிவந்த 'கடல்' திரைப்படத்தின் வாயிலாக இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் இம்மாதம் 27ஆம் தேதி வெளிவர காத்திருக்கும் செக்கச் சிவந்த வானம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் "பாரதி கண்ட புதுமைப் பெண்ணை காண தயாரா" என்று பதிவிட்டு ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதனை காண அனைவரும் காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Bharathi kanda pudhumai pennai kaana thayaara? #Payanam pic.twitter.com/mjasHRcieK
— arvind swami (@thearvindswami) September 17, 2018