பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் திருமணம்! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறு மக்களை கவர்ந்த பிரபலமான தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் அதிரடித் திருப்பங்களுடன், மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இத்தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இத்தொடர் டிஆர்பியிலும் முன்னணியில் வந்து பெருமை சேர்த்தது.
பாரதிகண்ணம்மா தொடரில் அருண்பிரசாத் ஹீரோவாகவும், ரோஷ்னி கதாநாயகியாகவும் நடித்து வந்தனர். ஆனால் அண்மையில் சில காரணத்தால் ரோஷினி தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது கண்ணம்மாவாக வினுஷா என்பவர் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஆரம்பத்தில் கண்ணம்மாவை கொல்ல வில்லனாக வந்து, பின்னர் கண்ணம்மாவின் நல்ல குணத்தை கண்டு அவருக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரவீன்.
அவர் ஈரமான ரோஜாவே தொடரில் அழகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இத்தொடர் முடிவடைந்ததை தொடர்ந்தும் சில மாதங்களாக பாரதிகண்ணம்மா தொடரிலும் அவரது காட்சிகள் காட்டப்படவில்லை. இந்நிலையில் அண்மையில் பிரவீனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அத்தகைய திருமண வரவேற்பு புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.