#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கனவு நனவாகிருச்சு!! இன்ப அதிர்ச்சியில் பாரதி கண்ணம்மா வில்லி நடிகை! என்ன விஷயம் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பான, வித்தியாசமான கதையில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
பாரதிகண்ணம்மா தொடரில் ஹீரோவாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அருண், ஹீரோயினாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இதில் கொடூர வில்லி கதாபாத்திரத்தில் வெண்பாவாக நடித்து அனைவரையும் மிரள வைத்து வருபவர் பரீனா. இந்த நிலையில் அவருக்கு அண்மையில் விஜய் தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த வில்லிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அத்தகைய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அவர் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 8 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம். ஒரு வெகுளி பெண்ணாக உடைந்த மேக்கப் பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டு, பேருந்தில் ஏறி நம்பிக்கையோடு சென்னைக்கு பயணம் செய்து ராஜ் டிவியில் இணைந்தது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. தற்போது எனது கனவு நனவான தருணம். மிகவும் நன்றி என பாரதி கண்ணம்மா இயக்குனர் பிரவீன் பென்னட்டிற்கு பரீனா நன்றி கூறினார்.