பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பாரதிக்கு முன்பே வெண்பாவிற்கு நேர்ந்த சோதனை! அதிரடியாக அம்மா போட்ட அதிரடி கண்டிஷன்! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான தொடர்கள் ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்தான் பாரதி கண்ணம்மா. இதில் பாரதி கதாபாத்திரத்தில் ஹீரோவாக அருண் மற்றும் கண்ணம்மாவாக கதாநாயகி கதாபாத்திரத்தில் ரோஷினி ஆகியோர் நடித்து வந்தனர்.
ஒரு சில காரணங்களால் ரோஷினி தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது கண்ணம்மாவாக வினுஷா என்பவர் நடித்து வருகிறார். மேலும் வில்லி வெண்பாவாக பரீனா அனைவரையும் மிரளவைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெண்பாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரேகா பாரதிகண்ணம்மா தொடரில் இணைந்துள்ளார். நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடித் திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரின் புதிய ப்ரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அதில், கருக்கலைப்பு விஷயத்திற்காக நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த வெண்பாவை போலீசார் மீண்டும் பாரதி முன்பே கைது செய்துள்ளனர். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் வெண்பாவை பார்க்க செல்லும் அவரது அம்மாவிடம் அவர் தன்னை காப்பாற்றும்படி கேட்கிறார். அதற்கு அவர் நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என கல்யாணம் குறித்து அதிரடி கண்டிஷன் போடுகிறார். அதைக்கேட்ட வெண்பா ஆடிப் போயுள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.