பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
டிசம்பர் மாதத்தில் பாரதிகண்ணமா முடியப்போகிறதா?.. வாய்ப்பில்ல ராஜா - சீரியல் குழுவினரின் வீடியோவால் கடுப்பான ரசிகர்கள்..!!
சின்னத்திரை ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்படும் நெடுந்தொடர் பாரதிகண்ணம்மா. இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் முதலில் வரவேற்பை பெற்றிருந்தாலும், தற்போது எப்பொழுது இந்த நெடுந்தொடர் முடியும் என்று ரசிகர்கள் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் டிசம்பர் மாதத்தில் பாரதிகண்ணம்மா நெடுந்தொடர் முடிய இருப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவியிருந்த நிலையில, பாரதி கண்ணம்மா குழு வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், இயக்குனர் பிரவீன் பென்னட், ஹேமா, அஞ்சலி மற்றும் அஞ்சலியின் கணவர் இருக்கின்றனர். "எப்பொழுதுதான் சீரியலை முடிப்பீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்க, அதற்கு அவர்கள் எங்களுக்கு end-ஹே கிடையாது என்று கூறுவது போல இருக்கிறது. இதனால் நெட்சன்கள் பலரும் இந்த சீரியலுக்கு ஒரு முடிவே இல்லையா? என்று கடுப்பாகி கமெண்ட் செய்துவருகின்றனர்.