#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட... பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவா இது... வெளியான வீடியோவால் வாயடைத்து போன ரசிகர்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு பெரும் ஆர்மியே உருவானது.
மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகளும் வர துவங்கியது. இவர் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என்ற இரண்டு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அந்த வகையில் தற்போது சேலையில் கவர்ச்சியை தெறிக்கவிட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம லாஸ்லியாவா இது என வாயடைத்து போய்யுள்ளனர்.