பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"என் காதல் வாழ்க்கை மிகவும் கேவலமாக சென்று கொண்டிருக்கிறது!" பிக் பாஸ் தர்ஷன்!
ஆரம்பகாலத்தில் மாடலிங் துறையில் இருந்த தர்ஷன், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து, பின்னர் பிக் பாசில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றார் தர்ஷன். அவர்தான் சீசன் 3ன் டைட்டில் வின்னர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரெனெ அவர் வெளியேற்றப்பட்டார்.
அப்போது பிக் பாஸ் மேடையிலேயே தனது தயாரிப்பில் தர்ஷன் ஒரு படம் நடிப்பார் என்று கமல் கூறியிருந்தார். இதையடுத்து பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு, "கூகிள் குட்டப்பா" படத்தில் பிக் பாஸ் வீட்டில் அண்ணன் தங்கையாக பழகிய லோஸ்லியாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட தர்ஷன், "என்னுடைய காதல் வாழ்க்கை மிகவும் கேவலமாக சென்று கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் இருப்பதுபோல் எனக்கும் ஒரு கிரஷ் இருக்கிறது. அதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது. படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்" என்று கூறியுள்ளார்