#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊத்திய பிரபலம்! அவரையும் உள்ளே இழுத்துப் போட்ட பிக்பாஸ்!
விஜய் தொலைக்காட்சியில் இன்று இரவு 8 மணி முதல் பிக் பாஸ்-3 நிகழ்ச்சி துவங்கி வருகிறது . கடந்த இரண்டு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் பிக்பாஸ்-3ஐயும் தொகுத்து வழங்குகிறார்.
இந்த போட்டியில் ஒரு வீட்டில் 15 பிரபலங்கள் 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அவர்களில் மக்களின் வாக்குகள் அடிப்படையில், ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவர். இறுதியில் அதிக மதிப்பெண்களுடன் முன்னிலையில் இருப்பவரே வெற்றியாளர் ஆவார்.
இன்று ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்த இந்த நிகழ்ச்சி பிம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன், நடிகர் பருத்திவீரன் சரவணன், நடிகை ஷெரின், நடிகை பாத்திமாபாபு, நடிகர் கவிண், நடிகை மதுமிதா, டான்ஸ் மாஸ்டர் சாண்டி, விஜய்குமார் மகள் வனிதா, நடிகை ஷாக்ஷி அகர்வால், மடல் தர்சன், தொகுப்பாளினி அபிராமி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட நடிகை காஜலின் கணவரும், டான்ஸ் மாஸ்டருமான சாண்டி இந்த சீசனில் கலந்துகொண்டுள்ளார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவற்றையும் அதில் பங்குபெற்றவர்களையும் கேலி செய்து பாடல் அமைத்து பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி விழாவில் நடனமாடியிருந்தார். இதனை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சாண்டியே இன்று ஆரம்பமாகும் பிக் பாஸ் 3 ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதனை நடிகர் கமல் கிண்டலே சுண்டல் ஆகிவிட்டதா என கலாய்த்துள்ளார்.