பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ள பிக்பாஸ் புகழ் சுஜா!
தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்த சுஜா வருணி, கடந்த முறை நடந்த பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நிகழ்ச்சியில் இணைந்தார்.
இவரும் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ்வும் காதலித்து வந்தனர். 11 வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாக திருமணத்திற்கு முன்பே வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து இருவருக்கும் கடந்த வருடம் நவம்பர் மாதம் சென்னையில் திருமண்ம் நடைபெற்றது. இருவரும் இல்லற வாழ்வில் மிகவும் மகிந்து இருப்பதாக புகைப்படங்கள் மூலம் அடிக்கடி வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சுஜா கர்ப்பமாக இருக்கும் தகவலை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தான் கர்ப்பமாக இருப்பது தெரியும்படி புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை சுஜா.