#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அபிஷேக் பத்தி அப்படி சொன்னது தப்பு! போட்டுடைத்த அண்ணாச்சியிடம் எகிறிய பிரபலம்! வைரலாகும் சூடு பறக்கும் வீடியோ!!
பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராகக் கலந்து கொண்ட நமிதா மாரிமுத்து ஒரு சில காரணங்களால் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்
அவரைத் தொடர்ந்து போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளைப் பெற்று நாடியா சாங் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் அங்கு பல்வேறு டாஸ்க்குகளால் சண்டை, மோதல் உருவாகி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் பிக்பாஸ் நெருப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி போட்டியாளர்கள் பேச வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தங்களது கருத்துக்களை கூறுகின்றனர். அப்பொழுது இமான் அண்ணாச்சி வீட்டில் கொளுத்தி போடும் நெருப்பு அபிஷேக் என தனக்கு தோன்றுவதாக கூறியுள்ளார். அதைக்கேட்ட சிபி நீங்கள் அபிஷேக் பற்றி கூறியது தவறாக தெரிகிறது என கூறுகிறார். இதனால் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.