#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இனி தாடி இல்ல கேடி! அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் அடுத்த போட்டியாளர் யார்னு பார்த்தீங்களா! வெளிவந்த வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அதில் ராஜு வெற்றியாளர் ஆனார். இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலே தொகுத்து வழங்கவுள்ளார். இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.
#BBUltimate-ல் தாடி பாலாஜி !! #YaaruAnthaHousemate pic.twitter.com/6H7hY1uBT8
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 28, 2022
தற்போது வரை சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் Ultimate வீட்டிற்குள் போகவுள்ளதாக ப்ரமோ வீடியோக்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அடுத்த போட்டியாளரை அறிமுகப்படுத்தி வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது தாடி பாலாஜியும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.