#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் நாயகியின் காதல் ரகசியம் வெளியானது!. வைரலாகும் புகைப்படங்கள்!.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் RJ வைஷ்ணவி. அவர் அந்த நிகழ்ச்சியில் புறணி பேசும் பழக்கம் வைத்திருந்ததால் ரசிகர்களால் வெறுக்கப்பட்டார்.
மேலும் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் மற்றும் பாடகி ரம்யா ஆகிய இருவரும் பிக்பாஸ் 2 வீட்டில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களை பார்த்த அப்போதைய போட்டியாளர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா வென்று முதலிடம் பிடித்தார். ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பிடித்தார். போட்டியில் வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு வெற்றிக்கோப்பையும், 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வைஷ்ணவியின் காதலர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. வைஷ்ணவி காதலித்து வரும் அஞ்சன் விமானியாக பணியாற்றுகிறார். இருவரும் இரண்டுவருடங்களாக காதலித்துவருவதாக கூறுகின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன் வைஷ்ணவியை சந்தித்த அவர் டேட்டிங் சென்றுள்ளார். பின்னர் அப்போதிலிருந்து இருவரும் தொடர்ந்து உறவில் உள்ளனர் என தெரியவந்துள்ளது. இவர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.