பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
காந்த கண்ணழகி பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் பிக்பாஸ் தர்சன்! வைரல் வீடியோ.
பிக்பாஸ் சீசன் மூன்று மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தர்சன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் பிக்பாஸ் போட்டியாளர்கள் உட்பட ரசிகர்களும் வெற்றிபெற வேண்டும் என நினைத்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக கடைசி வாரத்திற்கு முந்தைய வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் பட்டத்தை வெல்லமுடியவில்லை என்றாலும் தான் தயாரிக்க இருக்கும் படத்திற்கு வாய்ப்பு கொடுத்து பிக்பாஸ் மேடையில் தர்சனை சந்தோசப்படுத்தினர் நடிகர் கமல். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வூடுத்ததாக பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு போட்டியாளர்கள் தயாராகிவருகின்றனர்.
இந்நிலையில், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடலுக்கு தர்சன் நடனம் ஆடியுள்ள வீடியோ வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.