#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! நம்ம பிக் பாஸ் ஜூலியா இது? என்ன ஒரு அழகான போட்டோ!
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. போராட்டத்தில் இவர் பேசிய வசனங்கள் மிகப்பெரிய வரவேற்பை இவருக்கு பெற்றுத்தந்தது. தமிழக மக்கள் அனைவராலும் விரும்பட்ட ஜூலி தற்போது அனைத்து மக்களாலும் வெறுக்கப்படும் ஒரு முகமாக மாறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார் ஜூலி. மக்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவர் பிக் பாஸ் வீட்டில் கூடா நட்பால் மக்கள் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். ஜூலி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஜூலி தற்போது அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக மாறி வருவதை கண்டு பலரும் இவங்களுக்கு வந்த வாழ்வு என்று கிண்டல் செய்து வருகின்றனர்.