#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விவாகரத்து ஆன நிலையில் பிக் பாஸ் காயத்ரி கர்ப்பமா? வைரலாகும் புகைப்படம்!
நடிகையும், பிரபல நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருப்பதுபோல் புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடர் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் நடிகை காயத்ரி ரகுராம்.
காயத்ரி ரகுராம் அவரது பெயரை கேள்விப்பட்டவுடன் பிக்பாஸ் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர் காயத்ரி. இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் காயத்ரி ரகுராம் ஒரு காரில் உட்கார்ந்திருப்பது போன்றும் அவர் கர்ப்பிணியாக இருப்பது போன்றும் உள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆனதால் இந்தப்புகைப்படத்தை பார்ட்டா அனைவரும் சற்று குழம்பியுள்ளார். மேலும் சிலர் அவர்க்கு வாழ்த்து கூறியும், சிலர் கலாய்த்தும் வருகின்றனர்.
மேலும் காயத்ரி ஒரு தனியார் தொலைக்காட்சி தொடரில் நடிப்பதாகவும் அந்த தொடருக்கான ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் எனவும் சிலர் கருது தெரிவித்து வருகின்றனர். எது உண்மை என்று காயத்ரிதான் விளக்கம் தரவேண்டும்.
😉👩👦 pic.twitter.com/OxtTqtUyCf
— Gayathri Raguramm (@gayathriraguram) November 1, 2018