#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் லாஷ்லியா நடித்த முதல் விளம்பரப்படம்! இணையத்தில் செம வைரலாகும் வீடியோ.
பிக்பாஸ் புகழ் நடிகை லாஷ்லியா நடித்துள்ள விளம்பர படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்தில் பல்வேறு தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த இவர் அதன் பின்னர் சக போட்டியாளர் நடிகர் கவினுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சையில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.
இருந்தாலும் ரசிகர்கள் இவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக லாஷ்லியா தேர்வு செய்யப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்தநிலையில் இவருக்கு முதல் இடம் கிடைக்கவில்லை. இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன.
பிரபல இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா. இந்நிலையில் லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய சக்தி டிவியில் குறும் படங்களை வெளியிடும் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். தற்போது ந்த விளம்பரம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.