#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிர்ச்சி... பிக்பாஸ் லாஷ்லியாவின் தந்தை நேற்று இரவு திடீர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்..
பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரணம் அடைந்தார் என்ற செய்தி அவரின் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல்வேறு ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இவர் சக போட்டியாளர் கவினுடன் ஏற்பட்ட முக்கோணக் காதலை அடுத்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார்.
இந்நிலையில்தான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஷ்லியாவின் குடும்பத்தினர் லாஷ்லியாவின் மீது உள்ள கோவத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியிலையே காட்டினர். குறிப்பாக லாஷ்லியாவின் தந்தை லாஷ்லியா மீது கோவப்பட்டதும், பின் அவரை கட்டி அனைத்து சமாதானம் செய்த காட்சிகளும் இன்றுவரை பிக்பாஸ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.
லாஷ்லியாவின் தந்தை மரியநேசனின் இந்த அதிரடி செயலை பார்த்த ரசிகர்கள் அவருக்கு கூட சமூக வலைத்தளங்களில் ஆர்மி தொடங்கி அவரை பற்றி பதிவிட்டுவந்தனர். இந்நிலையில் லாஷ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்று இரவு திடீரென காலமானார்.
லாஷ்லியா தந்தையின் இந்த திடீர் மரண செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாஷ்லியாவின் ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் பலரும் லாஷ்லியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தங்கள் இரங்களையும், ஆறுதலையும் தெரிவித்துவருகின்றனர்.