#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இனி அவர் சொன்னால் மட்டுமே படங்களில் நடிப்பேன்! அதிரடி முடிவெடுத்த பிக் பாஸ் ரித்விகா!
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரித்விகா. மெட்ராஸ் படத்தில் இவரது நடிப்பு மற்றும் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்றார் ரித்விகா.
மெட்ராஸ் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரித்விகா நடித்தார். கபாலி படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரித்விகாவுக்கு உதவவில்லை.
இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேரும் வாய்ப்பு ரித்விகாவுக்கு கிடைத்தது. போட்டியின் ஆரம்பத்தில் இவர் ஒரு வாரம் கூட தாக்குபிடிக்கமாட்டார் என நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் பிக் பாஸ் சீசன் இரண்டின் வெற்றியாளர் என்ற பட்டத்தை பெற்றார்.
தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் ரித்விகா. இந்நிலையில், விஜய் சேதுபதியின் ஒரு படத்தில் ரித்விகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள ரித்விகா, நான் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும், நான் ஒப்பந்தம் செய்துள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார் ரித்விகா.
மேலும், இனி புது படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்றும், வருங்கால கணவர் சம்மதித்தாள் மட்டுமே படங்களில் நடிப்பேன் என்றும் அதிரடியாக கூறியுள்ளார் ரித்விகா.