பிக்பாஸ் சீசன் 3: வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு! மகிழ்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்!



bigg-boss-tamil-season-three-coming-soon

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

சீசன் ஓன்று, இரண்டு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது சீசன் 3 தொடங்கவுள்ளது. முதல் சீசன் மாபெரும் வெற்றிபெற்றிருந்தாலும், சீசன் இரண்டு சுமாரான வரவேற்பையே பெற்றது.

Bigg boss 3

இந்நிலையில் சீசன் 3 எப்போது? தொகுத்து வழங்கப்போவது யார்? போட்டியாளர்கள் யார் யார்? என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் மீண்டும் நடிகர் கமல்தான் சீசன் மூன்றை தொகுத்து வழங்கப்போவதாகவும், சீசன் 3 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் சற்றுமுன் அதிகாரபூர்வமாக விஜய் டிவி அறிவித்துள்ளது.