#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் சீசன் 3: இவர்கள் மூவரும் கலந்துகொள்வது உறுதி? யார் யார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர்களில் ஓன்று பிக்பாஸ். பிக் பாஸ் சீசன் ஓன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால் சீசன் இரண்டு எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் மூன்று தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து இதனை உறுதி செய்யும் விதமாக நேற்று விஜய் தொலைக்காட்சி ஒரு விடீயோவையும் வெளியிட்டது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் யார் யார் என்பது பற்றி பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக மிகவும் பிரபலமான மூன்று நபர்களின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடர் நாயகி ஆலியா மானசா, பிரபல குணசித்ர நடிகர் MS பாஸ்கர், மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியாகாத நிலையில் இவர்கள் கலந்துகொள்கிறார்களா இல்லையா என்பது நிகழ்ச்சி தொடங்கும் அன்றுதான் தெரியவரும்.