எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் சீசன் 3 தொடங்கும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு! இதோ!



Bigg boss tamil season three starting on june 23

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் பிக்பாஸ். நடிகர் கமலகாசன் கடந்த இரண்டு சீசனையும் தொகுத்து வழங்கினார்.

சீசன் ஓன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால், சீசன் இரண்டு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் மூன்று விரைவில் தொடங்க இருப்பதாக விஜய் தொலைக்காட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது.

bigg boss tamil

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என மக்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் இன்று பிக் பாஸ் தொடங்கும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது விஜய் டிவி. அதாவது வரும் ஜூன் 23 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

சீசன் மூன்றையும் நடிகர் கமல் தொகுத்து வழங்க உள்ளார். சீசன் மூன்றில் பங்கேற்கும் போர்ட்டியாளர்கள் குறித்து இதுவரை எந்த ஒரு தகவல்களும் வெளியாகவில்லை.