பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆத்தாடி.. பிக்பாஸ் அசல் கோளாறின் சம்பளம் இத்தனை லட்சமா?.. மக்களின் வெறுப்பை சம்பாரித்தாலும் நல்லா வாழ்ந்துருக்காருப்பா..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இது நான்கு வாரங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில், போட்டியிலிருந்து ஜி.பி.முத்து, அசல் கோளாறு, சாந்தி ஆகியோர் வெளியேறியிருக்கின்றனர். வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே.கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்ஷிதா, விக்ரமன், நிவாஷினி, சிவின் கணேசன் போன்றோர் வீட்டிற்குள் இருக்கின்றனர்.
இதில் நடிகை மைனா நந்தினி மட்டும் வைல்டுகார்டு என்று முதல் வாரத்திலேயே பிக்பாஸ் இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட அசல் கோளாறு, நிவாஷினியிடம் அதிகளவு நெருங்கி பழகியதாக கூறப்பட்ட நிலையில், அவரின் செயல்பாடுகள் வெளியில் வேறுமாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தியதால் மக்கள் அவருக்கு வாக்களிக்க தவறி, அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் நாளொன்றுக்கு 15,000 முதல் 17,000 வரை சம்பளம் பேசியிருந்தார் என்றும், இவ்வாறாக 22 நாட்களுக்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் அவர் சம்பளமாக பெற்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷயம் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றாலும், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.