பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடக்கடவுளே.. பிக்பாஸ் வீட்டில் ஜி.பி.முத்துவுக்கு திடீர் உடல்நலக்குறைவு..! வைரஸ் காய்ச்சலால் வெளியேற்றப்படுவாரா?.! ரசிகர்கள் பேரதிர்ச்சி..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் ௬-வது சீசன் தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், போட்டியாளராக களமிறங்கிய டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் மிகவும் அவதிப்பட்ட நிலையில், அவருக்கு சக போட்டியாளரான ரச்சிதா மாத்திரை கொடுத்து உதவி செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்களும் சிகிச்சையளித்துள்ளனர்.
மேலும் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக, சகபோட்டியாளர்களுக்கு பரவி விடக்கூடாது என ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வந்தால் மட்டுமே ஜி.பி.முத்து வெளியேற்றப்படுவாரா? அல்லது பிக்பாஸ் வீட்டில் இருப்பாரா? என்று உறுதிசெய்யப்படும்.