அவருக்கு எதிராக விஜய் செய்யும் திரை மறைவு வேலை.! பிரபல பத்திரிக்கையாளரின் ஓபன் ஸ்டேட்மென்ட்.!



Bismi about vijay and mansoor alikhan issue

நடிகர் மன்சூர் அலிகான் எதிராக விஜய் திரை மறைவில் வேலை பார்க்கிறார் என்று பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாகவே நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து திரிஷா உள்ளிட்ட பலரும் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறார்கள்.

vijay

மன்சூர் அலிகான் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் இழுக்கு என்று திரிஷா தெரிவித்திருந்தார். அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டோர் வன்மையாக இதனை கண்டித்துள்ளனர்.

ஆனால் நடிகர் விஜய் இந்த விவகாரம் குறித்து இதுவரையில் எந்த விதமான கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருந்து வருகிறார். மேலும் அவர் இப்படி மவுனமாக இருப்பதால் அவருக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 

இந்த விவகாரம் தொடர்பாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் தெரிவித்ததாவது த்ரிஷா விவகாரத்தில் விஜய் எதுவும் பேசவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம் தான். ஆனாலும் மன்சூர் அலிகானுக்கு எதிராக லோகேஷ் கனகராஜ், லியோ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கு பின்னால் விஜய் இருக்கிறார் என்பது மட்டும் எனக்கு தெளிவாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.

vijay

இவர்களின் இந்த செயல் விஜயை திருப்தி படுத்துவதற்காக தான் என்று கூறியுள்ள அவர், இது திரைத்துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் விஜய் அந்த திரைப்படத்தின் கதாநாயகன் அந்த திரைப்படத்தை மையமாக வைத்து தான் மன்சூர் அலிகான் இந்த கருத்தை கூறியிருக்கிறார்.

ஆகையால், முதலில் எதிர்க்க வேண்டியது விஜய் தான். இருந்தாலும் அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? அவரது துறை சார்ந்த பெண் சந்திக்கும் பிரச்சினைக்கு குரல் கொடுக்காத விஜய் அரசியலுக்கு வந்து ஒரு மாநிலத்திற்காக எப்படி குரல் கொடுப்பார் என மக்கள் கேள்வியெழுப்பவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.