#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட இவரா இப்படி... படுக்கைக்கு அழைத்த இயக்குநரின் முகத்திரையை கிழித்த வித்யா பாலன்..?
தமிழ் திரையுலகில் தற்பொழுது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் நயன்தாரா, த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல கதாநாயகிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து பாலிவுட் நடிகையான வித்யா பாலனும் தான் நடிக்கும் கதாபாத்திரம் அழுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்.
வித்யா பாலன் 2003ஆம் வருடம் பாலோ தேகோ என்ற வங்காள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடியெடுத்து வைத்தார். இதனை தொடர்ந்து 2005 ஆம் வருடம் பரிநீத்தா என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து பிலிம் பேர் அவார்டை வென்றார்.இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கின. மேலும் வித்யா பாலன் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த உருமி என்ற திரைபடத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். இதன் பின் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக்கிறார்
இத்தகைய நிலையில், வித்யா பாலன் ஒரு பேட்டியில் தன் வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் அவர்பட்ட கஷ்டங்களை சொல்லிருந்தார். அதில் ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக தமிழ் இயக்குநர் ஒருவரை சந்திக்க சென்றதாகவும், அந்த இயக்குநர் வித்யா பாலன் அவர்களை ரூமிற்கு பேச அழைத்திருக்கிறார். இதற்கு மறுத்த வித்யா பாலனை அந்த விளம்பர படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கூறி வருத்தமடைந்தார். இந்த பேட்டியின் காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.