கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பி 4 லட்ச ரூபாய் பறிப்பு.!! பயிற்சியாளர்கள் மீது பரபரப்பு புகார்.!!
மகனை குத்துச்சண்டை பயிற்சிக்காக அனுப்பிய பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி அந்தப் பெண்ணிடமிருந்து பல லட்ச ரூபாய் மற்றும் நகைகளை பறித்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மதுரை விளக்குத்தூண் உதவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
மகனுக்கு இலவச குத்துச் சண்டை பயிற்சி
மதுரையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் கடந்த 10 வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்த நிலையில் தனது 2 மகன்கள் உடன் தையல் கடை நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இரண்டாவது மகன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகனுக்கு குத்துச்சண்டையில் ஆர்வம் இருந்ததால் அவரது விருப்பப்படி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைந்துள்ள குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் இலவச குத்துச் சண்டை பயிற்சிக்காக சேர்த்திருக்கிறார்.
செல்போனிற்கு ஆபாச படம் அனுப்பி பணம் பறிப்பு
இந்நிலையில் மகனின் குத்துச்சண்டை பயிற்சி குறித்து 2 பயிற்சியாளர்களும் அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி வந்திருக்கின்றனர். மேலும் அந்தப் பெண் எங்கு தங்கியிருக்கிறார் என்பதை அறிந்து அவரது வீட்டிற்கு வந்த பயிற்சியாளர்கள் கத்தியை காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை ஆபாச படம் எடுத்துள்ளனர். மேலும் இந்தப் படங்களை சமூக வலைதளங்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்புவதாக கூறி மிரட்டிய பயிற்சியாளர்கள் தங்களுக்கு பணம் வேண்டும் என கேட்டு இருக்கின்றனர். அவர்களது மிரட்டலுக்கு பயந்த அந்தப் பெண் பயிற்சியாளர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர்களது செல்போன் நம்பரையும் பிளாக் செய்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணியின் மீது பாய்ந்த கொழுந்தன்... எமனாக மாறிய அண்ணன்.!! கொலையில் முடிந்த தகராறு.!!
காவல்துறையில் புகார்
இதனைத் தொடர்ந்து வேறொரு மொபைல் நம்பரில் இருந்து வாட்ஸ்அப் வழியாக 2 பயிற்சியாளர்களும் அந்தப் பெண்ணை மீண்டும் மிரட்டி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் மதுரை விளக்குத்தூண் உதவி கமிஷனர் அலுவலகத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளர்களான தேவராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகியோரின் மீது புகார் அளித்திருக்கிறார். மகனை குத்துச்சண்டை பயிற்சிக்கு அனுப்பிய பெண்ணிடம், பயிற்சியாளர்கள் தவறான முறையில் மிரட்டி பணம் பறித்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: உல்லாசத்தில் தகராறு... நிர்வாணமாக தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி.!! கேரள பெண் ருத்ரதாண்டவம்.!!