கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அண்ணியின் மீது பாய்ந்த கொழுந்தன்... எமனாக மாறிய அண்ணன்.!! கொலையில் முடிந்த தகராறு.!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணன் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத்தில் சரண் அடைந்த நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலத்தகராறு கிருஷ்ணகிரி
மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரி மலை கிராமத்தின் அருகே இருக்கும் உடுங்கல் போடூர் என்ற பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்களும், 1 மகளும் இருந்தனர். எல்லா குழந்தைகளுக்கும் திருமணமான நிலையில் அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மேலும் இவரது மூத்த மகனான மாதேஷ் என்பவருக்கும், இளைய மகன் வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்திருக்கிறது.
அண்ணியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வெங்கடேஷ்
வெங்கட்ராமனின் இளைய மகனான வெங்கடேஷ் பெங்களூரில் தேன் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். விடுமுறையில் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வரும் இவர் தனது அண்ணனுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஊருக்கு வந்த வெங்கடேஷ் தனது அண்ணன் மாதேஷ் வீட்டிற்கு சென்று இருக்கிறார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாதேஷ் மனைவி ரீனாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் வெங்கடேஷ்.
இதையும் படிங்க: மண்வெட்டியால் அடித்து மாமியார் படுகொலை... மது போதையில் மருமகன் வெறி செயல்.!!
தம்பியை கொலை செய்த அண்ணன்
இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த ரீனா வீட்டில் இருந்து வெளியேறி தனது கணவர் மாதேஷிடம் இது குறித்து தெரிவித்திருக்கிறார். அப்போது மாதேஷ் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு வெங்கடேஷ் கத்தியுடன் வந்துள்ளார். தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆத்திரமடைந்த மாதேஷ் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் தம்பியை சாராமாறியாக வெட்டி படுகொலை செய்தார். இதனைத் தொடர்ந்து சூளகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தார் மாதேஷ். இந்த கொலை சம்பவம் தொடர்பாக உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட கேரள பெண்... தேனியில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு.!! விசாரணையில் அதிர்ச்சி.!!