#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
CCV படம் பற்றி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அதிரடி ட்விட்...!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, அரவிந் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எராப்பா என மிக பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. குறிப்பாக திரையுலகம் பிரபலங்கள் அவர்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் செக்க சிவந்த வானம் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் எப்பவும் மாஸ்டர் தான் மற்றும் இதில் நடித்துள்ள அனைவரின் நடிப்பும் அட்டகாசம் என்று பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசை மெய் மறக்க வைக்கிறது என்றும் அந்த ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மற்றும் முக்கியமான பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அவரவர் ட்விட்டர் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் அவர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.