#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
CCV படத்திற்கு சென்னை வெற்றி திரையரங்கில் இன்று எத்தனை டிக்கெட் விற்றுள்ளது தெரியுமா?
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, அரவிந் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எராப்பா என மிக பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ இன்று அதிகாலையில் இருந்தே திரையிட்டு வருகின்றனர். மேலும் அதிகாலை ஷோ அனைத்துமே ஹவுஸ்புல் ஆகி இருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையறைகளில் ஒன்றான வெற்றி திரையரங்கில் இன்று அதிகாலை முதல் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் விற்பனையே எங்களை மிரள வைத்துவிட்டது என்று அந்த திரையரங்கின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதனை பற்றி அவர் கூறுகையில், செக்கச்சிவந்த வானம் முன்பதிவு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், படம் வெற்றி பெற எங்களது வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார்.