பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
படப்பிடிப்பின் போது சீரியல் நடிகைகாக அஜித் செய்த செயல்.. மனம் திறந்த நடிகை.!
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அஜித். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கான தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி, அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் எனும் பெயர் பெற்றுள்ளார்.
சமீபத்தில் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வரும் அஜித் தற்போது 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இது போன்ற நிலையில் அஜித்துடன் 'வலிமை' திரைபடத்தில் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் நடித்திருப்பார். அப்போது படப்பிடிப்பின் போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அஜித் குறித்து சைத்ரா ரெட்டி பேசிய போது, "வலிமை படத்தில் படப்பிடிப்பின் போது ரீ டேக் வாங்கிக் கொண்டே இருந்தேன். இதனால் படத்திலிருந்து விலகலாம் என முடிவெடுத்தேன். இதனை தெரிந்து கொண்டு அஜித் அவரும் ரீ டேக்குகளை வாங்கிவிட்டு என்னிடம் வந்து பேசினார். நடிங்க" என்று ஆறுதல் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.