#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அப்பா சாவவிட நெய்தோச முக்கியம்".. விஜயின் லியோ பாடலை கண்டித்த நடிகையை தரக்குறைவாக விமர்சித்த விஷமிகள்..!
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இருவரும் மாஸ்டர் திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் கை கோர்த்துள்ளனர்.
இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலிகான் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது.
விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் லியோ படத்தின் முதற்கட்ட போஸ்டர் மற்றும் பாடல் ஆகியவை வெளியாகி இருந்தன. இந்த பாடல் போதை பொருளை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக பல விமர்சனமும் எழுந்தது.
இது குறித்து தமிழ்நாடு சென்னை காவல்துறையில் புகாரளித்ததை தொடர்ந்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்த பாடலை விமர்சித்து ஆர்.ஜே மற்றும் கோமாளி பட நடிகை ஆனந்தி வெளியிட்டுள்ள பதிவில், "இன்னும் எத்தனை நாட்களுக்கு புகைபிடிப்பது.
ஒல்லியான இடுப்பை காண்பிப்பது இதெல்லாம் அழகான சாட் என்று சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். படைப்பாற்றல் குறைந்துவிட்டதா?, அல்லது பொறுப்புகள் குறைந்துவிட்டனவா? என்று கூறியிருந்தார்.
இவரது இந்த பதிவை கண்ட விஜய் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இவர் ஒரு பேட்டியில், "தனது தந்தையின் இறப்புக்கு செல்லும் வழியில் நெய்தோசை சாப்பிட்டதாகவும் கூறியிருந்தார். அதனை அவர்கள் கூறி கலாய்த்து வருகின்றனர்.