#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்றிலிருந்து சன்டிவியில் ஒருவாரத்திற்கு புதிய மாற்றம்! ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!
தமிழகம் மட்டும் இல்லாது இந்திய அளவில் மிக பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த பிரமாண்ட வளர்ச்சி மிக முக்கிய காரணங்களில் ஓன்று அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். தமிழ் தொலைக்காட்சிகளில் தற்பொழுது வரை முதல் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி தான். அதற்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்தான்.
பொதுவாக இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்த காலம் மாறி தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் என அணைத்து தரப்பு மக்களும் தற்போது சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். அதற்கு காரணமும் புத்தம்புதிய தொடர்கள் தான். அதேபோல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சன் தொலைக்காட்சியில் சினிமா பிரபலங்களான ராதிகா, ரம்யா கிருஷ்ணன், ரேவதி, நதியா, பானு என பல பிரபலங்கள் நடித்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தநிலையில் இன்றிலிருந்து வரும் சனிக்கிழமை 18.05.2019 வரை சன்டிவியில் புதிய மாற்றத்தை கொண்டுவருகின்றனர். சன்டிவில் தற்போது இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் நடிகை குஷ்பு நடிக்கும் லட்சுமி ஸ்டோர் தொடர் பிரமாண்டமாக இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த இரண்டு பிரமாண்ட தொடர்களும் இன்றிலிருந்து ஒன்றாக இணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இந்த மகா சங்கமம் 9:00மணிக்கு தொடங்கி 10:00மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது. இந்த மகா சங்கமம் நிகழ்ச்சியில் லட்சுமிஸ்டோர், மற்றும் ரோஜா தொடர் குடும்பத்தினர் இணைந்து நடிக்கின்றனர். மகா சங்கமத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மகாசங்கமம் இந்தவாரம் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாக உள்ளனர்.