பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடஅட .. வேற லெவல்! லண்டனில் செஃப் தாமுவுக்கு வழங்கப்பட்ட கெளரவம்! குவியும் வாழ்த்துக்கள்!!
தனது அசத்தலான சமையல் திறமையால் மக்களை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் செஃப் தாமு. இவரது சமையல் குறிப்புகளை பின்பற்றுபவர்கள் ஏராளம். செஃப் தாமு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டதன் மூலம் நன்கு பிரபலமானார். அவர் நடுவராக சமையலில் நிறைகுறைகளை சொல்வது மட்டுமின்றி, போட்டியாளர்களுடன் சேர்ந்து செய்த கலகலப்பான சேட்டைகளால் அனைவராலும் ரசிக்கப்பட்டார்.
இந்நிலையில் செஃப் தாமுவுக்கு அண்மையில் லண்டனில் உலக தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய உணவு, விருந்தோம்பல், சுற்றுலா சாதனைகள் விருது 2021 நிகழ்ச்சி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், செஃப் தாமுவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் முதல் விருதாகும். இதுகுறித்து புகைப்படத்துடன் மிகவும் பெருமையுடன் செஃப் தாமு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.