கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஏரிக்கரையில் சரக்கடித்த நண்பர்களுக்குள் தகராறு; நண்பனை போட்டுத்தள்ளிய பயங்கரம்.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் பகுதியில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது வீட்டில் இருந்தவாறு பணியாற்றி வருகிறார். கடந்த ஜூன் 11ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
மீண்டும் விக்னேஷ் வீடு திரும்பாத காரணத்தால், பதறிப்போன அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். அவரின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சாப்பிட அழைத்த தாயை கத்தியால் குத்திக் கொன்ற மகன்.! நடந்தது என்ன?? பகீர் சம்பவம்!!
நண்பனை வெட்டிக்கொன்ற பயங்கரம்
அப்போது, இறுதியாக அவர் கோவிந்தபுரம் ஏரி பகுதியில் இருந்தது தெரியவர, அவரின் நண்பர்களிடம் விசாரணை நடந்தது. விசாரணையில், ஏரிக்கரையில் அமர்ந்து மதுபானம் அருந்திய நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அச்சமயம் விக்னேஷை அவரின் நண்பரே வெட்டிக்கொலை செய்து, பின் உடலை அங்கேயே புதைத்து இருக்கிறார்.
இதனையடுத்து, விசாரணையில் உண்மையை அறிந்த காவல் துறையினர், அவரை கொலை செய்ததாக தலைமறைவான நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் பகீர் சம்பவம்.!! "நான் என்ன லூசா.?.." பெத்த தாயை அடித்தே கொன்ற 21 வயது மகன்.!!