கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திருச்சியில் பகீர் சம்பவம்.!! "நான் என்ன லூசா.?.." பெத்த தாயை அடித்தே கொன்ற 21 வயது மகன்.!!
திருச்சியில் 21 வயது மகன் தாயை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி துரைசாமிபுரம் தனமணி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இவரது மகனான கிருஷ்ணமூர்த்தி(21) என்பவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சிகிச்சை எடுத்தும் கிருஷ்ணமூர்த்திக்கு குணமாகவில்லை.
இதனால் கலியமூர்த்தி மற்றும் ஜெயந்தி ஆகியோர் தங்களது மகன் கிருஷ்ணமூர்த்தி கோவில்கள் மற்றும் பள்ளிவாசலுக்கு அழைத்து சென்றுள்ளனர். இது கிருஷ்ணமூர்த்திக்கு பிடிக்கவில்லை. மேலும் அழைத்துச் செல்லும் இடங்களிலும் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடத்துவது கிருஷ்ணமூர்த்தியை கோபப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மேலும் ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் என கிருஷ்ணமூர்த்தியிடம் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டேய் படிடா... அறிவுரை கூறிய அம்மா, தம்பி கழுத்தறுத்து கொலை.. அமைதியாக இருந்து அதிர்ச்சி தந்த மூத்த மகன்.!
இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி கோபமடைந்து தனது தாயிடம் தகராறு செய்திருக்கிறார் . மேலும் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து தனது தாயை பலமாக தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஜெயந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை புரிந்த பாலக்கரை காவல்துறையினர் ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. மேலும் தப்பியோடிய கிருஷ்ணமூர்த்தியையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
இதையும் படிங்க: கடைசியா ஒரேயொரு தடவை... கெஞ்சிய கள்ளக்காதலன்.. மறுப்பு தெரிவித்த பெண் பேருந்து நிலையத்தில் படுகொலை.!