கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breaking: செப்டிக் டேங்க் லாரி மோதி கல்லூரி மாணவி பலி; சென்னையில் சோகம்.!
இருசக்கர வாகனத்தில் சரியான திசையில் சென்றபோது, எதிர்திசையில் விதியை மீறி வந்த நபரால் விபத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலியான சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள பழைய மாமல்லபுரம் சாலை, செம்மஞ்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கேத்ரின். இவர் இன்று மதியம் 12 மணியளவில், ஆண் நண்பருடன் சோழிங்கநல்லூர் செல்ல அக்கரை வழியாக பயணித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சேலம்: ஐயோ.. பார்க்கவே பதறுதே.. தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 50 பேரின் உயிர் தப்பியது..!
அப்போது, அக்கரை, பக்கிங்காம் கால்வாய் பகுதியில், எதிர்திசையில் விதியை மீறி வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட எண்ணி கேத்ரினின் ஆண் நண்பர் வாகனத்தை லேசாக இடதுபுறம் நகர்த்தி இருக்கிறார்.
லாரி சக்கரம் ஏறி-இறங்கி உடல் நசுங்கி பலி
அச்சமயம், பின்னால் வேகமாக வந்த கழிவுநீர் வாகனம், இவர்களின் இருசக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் மாணவி கேத்ரீன் உட்பட இருவரும் தூக்கி வீசப்பட்டனர். வலப்புறம் சாலையில் விழுந்த கேத்ரின் மீது, லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், கேத்ரின் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த அடையாறு போக்குவரத்து காவல்துறையினர், கழிவுநீர் லாரி மீது வழக்குப்பதிவு செய்து அதனை சிறை பிடித்தனர். கேத்ரினின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: நெஞ்சில் கம்பி சொறுகி சோகம்.. லாரி - பேருந்து மோதி நடந்த விபத்தில் பயணி பலி.!