கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கஞ்சா விற்பனைக்கு மறுப்பு தெரிவித்த ஏசி மெக்கானிக் கொடூர கொலை; கஞ்சா வியாபாரி கும்பல் பகீர் செயல்.!
சென்னையில் உள்ள அம்பத்தூர் ஐசிஎப் காலனி பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 23). இவர் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.
கடந்த 30 ம் தேதி ராஜேஷ் திடீரென மாயமான நிலையில், அயப்பாக்கம் ஏரியில் சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வக்கீல் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு கொலை.. இதுதான் காரணமா?.. நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்.!
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அயப்பாக்கம் ஏரியில் ராஜேஷ் மதுபானம் அருந்தி இருக்கிறார்.
கஞ்சா விற்பனை விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்
அச்சமயம் அங்கு வந்த முகப்பேர் மேற்கு பகுதியில் வசித்து வரும் மூர்த்தி, தான் கொடுக்கும் கஞ்சாவை அம்பத்தூர் பகுதியில் இருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து பணம் தருமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார்.
இந்த விசயத்திற்கு ராஜேஷ் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த மூர்த்தி கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜேஷை அடித்துக்கொலை செய்து ஏரியில் வீசி சென்றுள்ளார்.
விசாரணையில் உண்மையை அறிந்த காவல்துறையினர் மூர்த்தி (32), சிவகுமார் (23), சரவணன் (27), நந்தகுமார் (22), சுஜித் (21) ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தோல் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்; பொறுமை தாங்காமல் மனைவி செய்த காரியம்.! சென்னையில் அதிர்ச்சி.!