"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
ரௌடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம்; காவல் ஆணையர் அருண் மன்னிப்பு கோரினார்.!
சென்னை மாநகராட்சியின் காவல் ஆணையராக, கடந்த ஜூலை 08ம் தேதி அருண் பொறுப்பேற்றார். இவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, "ரௌடிகளுக்கு புரியும் மொழியில் தக்க பாடம் கற்பிக்கப்படும்" என தெரிவித்து இருந்தார். இதற்குப்பின் தமிழ்நாடு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது.
அடுத்தடுத்த என்கவுண்டர்
இதனிடையே, இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். வேறொரு வழக்கில் தேடப்பட்டு வந்த காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோரும் என்கவுண்டர் செய்யப்பட்டனர். மேலும், உதவி ஆணையர் உட்பட பல அதிகாரிகளும், ரௌடிகளின் இல்லத்திற்கு சென்று இனி திருந்தி ஒழுக்கமாக வாழுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர்.
மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு
இதனிடையே, சென்னை திருவொற்றியூர் ரௌடி ஒருவரின் வீட்டிற்கு சென்ற உதவி ஆணையர் இளங்கோவன், தனது கண்டிப்பை தெரிவித்துள்ளார். மேலும், அவரின் மனைவியிடம் இனி கத்தி எடுத்து கொலை வழக்கில் சிக்கினால் என்கவுண்டர் தான் எனவும் கூறி இருக்கிறார். மாவுக்கட்டு போடுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
இதையும் படிங்க: கோவில் வாசலில் பூசாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஒன்றுகூடி உயிரை காப்பாற்றிய மக்கள்.! சென்னையில் நெகிழ்ச்சி நிகழ்வு.!
நீதிமன்றத்தில் விசாரணை
இந்த விஷயம் குறித்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் நடந்த நிலையில், அக்.14 ம் தேதி மாநகர ஆணையர் அருண் நேரில் ஆஜராக சம்மனும் வழங்கப்பட்டது. இதனிடையே, நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நீதிபதி மணி குமார் முன்னிலையில் அருண் ஆஜரானார். அவர் மன்னிப்பு கூறியதை தொடர்ந்து, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
வழக்கில் இருந்து விடுவிப்பு
குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல் ஆணையர் தெரிவித்தது, அவருக்கு எதிராக வழக்கை மனித உரிமை ஆணையத்தால் பதிவு செய்ய வைக்கப்பட்டுள்ளது.. இந்த விஷயம் குறித்து விளக்கம் அளித்த அருண், "என் கருத்துக்கள் மனித உரிமையை மீறவில்லை. மிரட்டும் வகையிலும் இல்லை. விழிப்புணர்வுக்காக அவ்வாறு பேசினேன். அந்த கருத்தில் சிலருக்கு முரண் கருத்து இருந்ததால் மன்னிக்கவும்" என தெரிவித்ததைத்தொடர்ந்து, அவர் வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: எச்சரிக்கையை மீறி மெரினாவில் ஆனந்த குளியல்.. இன்பசுற்றுலா இறுதிச் சுற்றுலாவான சோகம்.! கல்லூரி மாணவர் பலி.!