கோவில் வாசலில் பூசாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஒன்றுகூடி உயிரை காப்பாற்றிய மக்கள்.! சென்னையில் நெகிழ்ச்சி நிகழ்வு.!
சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக, பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து நீர் மழை நின்றதும் வெளியேற்றப்பட்டாலும், ஒருசில இடங்களில் மட்டும் வெள்ளம் தொடருகிறது.
வெள்ள நீர் அகற்றம், மின்னிணைப்பு பணிகள், சாலைகளை சுத்தம் செய்தல் என மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தொடர் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: எச்சரிக்கையை மீறி மெரினாவில் ஆனந்த குளியல்.. இன்பசுற்றுலா இறுதிச் சுற்றுலாவான சோகம்.! கல்லூரி மாணவர் பலி.!
இரும்பு கதவில் பாய்ந்த மின்சாரம்:
இந்நிலையில், பொன்னேரியில் உள்ள புழல் பகுதியில், சிறிய கோவில் ஒன்று உள்ளது. மழை வெள்ளம் கோவிலையும் விட்டு வைக்காதநிலையில், அதன் வாசலில் நீர் தேங்கி இருந்தது. இன்று காலை கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்தார்.
பூசாரி உயிர்தப்பினார்
அச்சமயம், அவர் வாயில் கதவை கையால் பிடித்து திறக்க முற்பட்டபோது, இரும்பு கதவின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதுதெரியாமல் பூசாரி கைவைத்து அலறி இருக்கிறார். உடனடியாக அங்கிருந்த சிலர், விரைந்து செயல்பட்டு மரக்கட்டை கொண்டு பூசாரியை மீட்டனர்.
மேலும், அவரின் உயிரை காக்கும் பொருட்டு சிபிஆர் சிகிச்சை அளித்து, மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மின்சாரம் பாய்ந்து பூசாரி சரிந்த காட்சிகள்
கரண்ட் ஷாக் அடித்து துடிதுடித்த பூசாரி... அடுத்த கணமே நடந்த அதிசயம்... துணிந்து காப்பாற்றிய பக்கத்து வீட்டுக்காரர்!#Chennai #Temple #Electricshock #Attack #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/HONlCi6aRl
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) October 17, 2024
வீடியோ நன்றிநியூஸ் தமிழ் 24 X 7
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை 5 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!