#Breaking: கல்லூரி வளாகத்திலேயே மாணவியை நிர்வாணப்படுத்தி பாலியல் சீண்டல்; காதலருடன் தனிமையில் இருந்தபோது பகீர்.!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில், 19 வயதுடைய கல்லூரி மாணவி பயின்று வருகிறார். இவர் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் துறையில் பயில்கிறார். கன்னியாகுமரியை சொந்த ஊராக கொண்ட மாணவிக்கு, கல்லூரியில் தன்னுடன் பயின்று வரும் மூன்றாம் ஆண்டு மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது.
பாலியல் தொல்லை
இருவரும் இரவு நேரங்களில் கல்லூரி வளாகத்தில் உள்ள தனிமை பகுதியில் சந்திக்கொள்வது இயல்பு என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவரும் தனிமையில் சந்தித்தபோது, அங்கு வந்த மர்ம நபர், காதலரை தாக்கி இருக்கிறார். பின் பெண்ணை நிர்வாணப்படுத்தி, பாலியல் சீண்டல் அளித்து வீடியோ எடுத்து தப்பி சென்றுள்ளார்.
இதையும் படிங்க: விசாரணைக்கு தொடர்புகொண்ட பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; ஜேசிபி உரிமையாளர் கைது..!
காவல்துறையினர் விசாரணை
பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் காவல் துறையினர், மர்ம நபர்களுக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: உணவு டெலிவரி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை., எஸ்.ஐ-க்கு ஆபாச அர்ச்சனை.. இளைஞர்கள் அடாவடி.!