போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் மகன்; நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.!



Chennai HC Gives Bail to mansoor Alikhan Son  

 

முகப்பேர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு, போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டார்.

நிபந்தனையின் ஜாமின்

தினமும் ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் துக்ளக் அலிகானுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரையில் துக்ளக் நிபந்தனையை பின்பற்ற வேண்டும் என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். 

இதையும் படிங்க: அரசியல் கேள்விகளை கேட்காதீங்க - டென்ஷனில் ரஜினிகாந்த்.! 

chennai

காவல்துறை வாதம்

மேலும், காவல்துறையினர் சார்பில் வாதிடும்போது, துக்ளக் அலிகானிடம் இருந்து போதைப்பொருள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கொடுத்த வாக்குமூலத்தின்பேரில் துக்ளக் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜாமின் வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க: நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!