மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!
சென்னை எம்.ஜி.ஆர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் இரயில் முன்பதிவு தொடக்கம்.! விபரம் உள்ளே.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை சென்னை எம்.ஜி.ஆர் இரயில் நிலையம் - நாகர்கோவில், மதுரை - பெங்களூர் கேன்ட் வந்தே பாரத் அதிவிரைவு இரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். காணொளி வாயிலாக தொடங்கி வைக்கப்படும் இந்நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இரயில்
சென்னை எம்.ஜி.ஆர் இரயில் நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் 20627 வந்தே பாரத் இரயில், சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று மதியம் 01:00 மணியளவில் நாகர்கோவில் சென்றடையும். பின் மறுமார்க்கத்தில் 20628 வந்தே பாரத் இரயில், மதியம் 02:20 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இரயில், இரவு 11:00 மணியளவில் சென்னை எம்.ஜி.ஆர் நிலையம் சென்றுசேரும். இதன் பயண நேரம் 8 மணிநேரம் 50 நிமிடங்கள் ஆகும்.
இதையும் படிங்க: கையில் சிகிரெட், கட்டையுடன் மாமூல் கேட்டு அடாவடி; நூதன பிச்சையெடுத்த ரௌடியின் பகீர் மிரட்டல்.!
மதுரை - பெங்களூர் கேன்ட் இரயில்
அதேபோல, மதுரையில் இருந்து பெங்களூர் பயணிக்கும் வந்தே பாரத் இரயில் 20671 காலை 05:15 மணியளவில் பயணத்தை தொடங்கி திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூர் காண்ட் இரயில் நிலையத்திற்கு மதியம் 01:00 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக 01:30 மணிக்கு மதுரை நோக்கி புறப்படும் 20672 இரயில், இரவு 09:45 மணியளவில் மதுரை வந்துசேரும். இதன் பயணநேரம் 8 மணிநேரம் 15 நிமிடங்கள் ஆகும்.
மேற்கூறிய இரண்டு ரயில்களும் செப் 2 ம் தேதி முதல் சேவைக்கு வருகிறது. அன்று முதல் இரயில் தனது பயணத்தை தொடங்குகிறது. ஆகஸ்ட் 31 ம் தேதியான நாளை சிறப்பு பயணமாக பிரதமரால் கொடியசைத்து சேவை தொடங்கப்படுவதால், சிறப்பு பயணத்திட்டம் தொடங்க மதியம் 12:30 மணியளவில் மதுரை மற்றும் சென்னை எம்.ஜி.ஆர் இரயில் நிலையங்களில் இருந்து தனது பயணத்தை தொடங்குகின்றன. இரண்டு ரயில்களும் இரவு 09:30 மணியளவில் தங்களின் இலக்கான பெங்களூர் மற்றும் நாகர்கோவில் சென்றுசேரும்.
🚄 Bookings are now open for the 20627/20628 #Nagercoil Jn - #Chennai Egmore #VandeBharatExpress!
— Southern Railway (@GMSRailway) August 30, 2024
🎟 Secure your seats today! #SouthernRailway pic.twitter.com/EQNAIcnic6
இதையும் படிங்க: திமுக கொடிகட்டிய காரில் அதிவேகம், அலப்பறை.. அபராதம் விதித்து ஆப்படித்த காவல்துறை.!