அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
தங்கக்கட்டி திருட்டு முயற்சி; கோவிந்தனின் காணிக்கையில் கைவைத்த தற்காலிக ஊழியர் கைது.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முக்கிய நாட்களில் இலட்சத்தின் எண்ணிக்கையையும் இது தாண்டுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை தொகை, தங்கம் போன்ற ஆபரணங்களை கணக்கிட தினமும் பணிகள் நடைபெறும். அந்த வகையில், திருமலை உண்டியலுக்கு வந்த தங்க பிஸ்கட் ஒன்றை தற்காலிக ஊழியர் திருட முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
தங்கக்கட்டி திருட முயற்சி
தங்கம் தொடர்பான பொருட்களை பிரித்து வங்கியில் ஒப்படைக்கும் பிரிவில் வேலை பார்த்து வரும் தற்காலிக ஊழியர் பென்ஹலயா, தங்கத்தை நகரும் வண்டியில் வைத்து திருடிச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: HMPV Virus: திருப்பதி வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! மாஸ்க் கட்டாயம்.!
அப்போது, அவரின் திருட்டு செயலை தேவஸ்தான நிர்வாகிகள் கண்டறிந்துவிடவே, உடனடியாக காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், அவர் 100 கிராம் எடையுள்ள தங்க கட்டியை திருட முற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: புத்தாண்டு வாழ்த்து சொல்லவில்லை; பெற்றோரை இழந்த மாணவி தற்கொலை.. விடுதி அறையில் சோகம்.!