கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திமுக கொடிகட்டிய காரில் அதிவேகம், அலப்பறை.. அபராதம் விதித்து ஆப்படித்த காவல்துறை.!
சென்னையில் உள்ள மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சுற்றுச்சாலை பகுதியில், செங்குன்றம் அருகே TN 18 BK 6667 பதிவெண் கொண்ட மகேந்திரா எக்ஸ்யுவி 700 காரில், திமுக கொடிகட்டப்பட்டு இருந்தது.
இந்த காரில் பயணம் செய்த இளைஞர்கள் சிலர், காரின் மேல்பக்கத்தை திறந்துவிட்டபடி, அதனை அதிவேகத்தில் சாகசம் செய்வது போல் இயக்கி மகிழ்ந்தனர். மேலும், அணியாக திரண்டு திரைப்பட பாணியில் காரை வைத்து இயக்கி வந்தனர்.
TN 18 BK 6667 திமுகவினர்க்கு சொந்தமான இந்த வண்டி மக்களை அச்சுறுத்தும் வகையிலும் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் ஒட்டி செல்லப்பட்டுள்ளது
— Joaquin Phoenix (@PhoenixAdmk) August 4, 2024
காவல்துறை இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமா @tnpoliceofflpic.twitter.com/yztIpGpQW3
இதையும் படிங்க: "கொலைகள் நடக்கத்தான் செய்யும். ஆனால்.," - சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டி.!
இந்த விஷயம் குறித்த காணொளிகள் அவ்வழியாக பயணம் செய்த வாகன ஓட்டிகளால் படமெடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
இதனை வைத்து உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின் ஆபத்தான வகையில் காரை இயக்கிய நவீனின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தினர்.
இவ்வாறான சர்ச்சை செயலில் ஈடுபட்டவர்களை கடுமையாக கண்டித்தும் அனுப்பி வைத்தனர்.
மீஞ்சூர்– வண்டலூர் வெளிவட்ட சாலை செங்குன்றம் பகுதியில்
— Joaquin Phoenix (@PhoenixAdmk) August 5, 2024
TN 18 BK 6667 Mahindra XUV 700 காரை ஆபத்தான முறையில் ஓட்டிய நவீன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து ரூ.10,000/- அபராதம். pic.twitter.com/MRAsNKWs5A
இதையும் படிங்க: சூறைக்காற்றுடன் சென்னையை புரட்டியெடுத்த கனமழை.!