கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திருமணமான ஒரேநாளில் உயிரிழந்த மணமகன்; பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த சோகங்கள்.!
சென்னையில் உள்ள பெரவள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் லோகேஷ் (வயது 40). இவர் ஐடி ஊழியராக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருச்சியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 36).
இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் 09ம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தை தொடர்ந்து மணமகன் வீட்டில் தம்பதிகள் பேசிக்கொண்டு இருந்தனர். அச்சமயம் திடீரென லோகேஷின் வாய் மற்றும் மூக்கில் இருந்து நுரைதள்ளி இருக்கிறது.
லோகேஷ் பரிதாப பலி
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக லோகேஷை மீட்டு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், லோகேஷ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வெளிநாடு வேலைக்கு செல்ல மறுத்து அடம்; தாயின் அறிவுரையால் இளைஞர் தற்கொலை.!
இதனால் புதுமணப்பெண் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ராஜலட்சுமியின் முன்னாள் கணவர் கொரோனாவால் உயிரிழந்துவிட, சில ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது துணையை தேர்வு செய்த நிலையில், அவரும் தற்போது உயிரிழந்தது பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
அவரின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: துணிதுவைக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; மின்சாரம் தாக்கி பரிதாப பலி.!